மாவீரன் திரைப்படத்தின் புதிய சினிக் பிக் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

மண்டேலா திரைப்படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருந்த மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வித்தியாசமான கதை காலத்துடன் காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருந்த இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. மேலும் ரசிகர்கள் மதிலும் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மாவீரன் படகுழு சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு காம்பினேஷனில் உருவாகி இருக்கும் புதிய சினிக் பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.