மாவீரன் திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Maaveeran movie collection update viral:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா, சுனில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருந்த
இப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்த நிலையில் 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரூ. 89 கோடி வரை வசூலித்துள்ளதாக போஸ்டருடன் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இப்படம் 11ஆம் தேதியான நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியா இருப்பது குறிப்பிடத்தக்கது.