
நாளைக்கு நாள் அதிகரிக்கும் மாவீரன் படத்தில் வசூல் மூன்று நாளில் மொத்தம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை என படிப்படியாக வளர்ந்து வந்து இன்று உச்சம் பெற்றுள்ள இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் மாவீரன்.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளே ரூபாய் பத்து கோடி வசூலை தொட்ட இந்த படம் மூன்று நாள் முடிவில் 48 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் மத்தியில் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் நாளுக்கு நாள் மாவீரன் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
