Maari 2 Trailer

Maari 2 Officila Trailer : செம மாஸாக தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வலம் வரும் நடிகர் தனுஷ்.

இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது, ட்ரைலர் இதோ உங்களுக்காக

YouTube video

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர், டேவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.