Maanadu Producer

Maanadu Producer : சிம்பு ரசிகர்களை கண்டித்து அவர்களுக்கு வேண்டுகோளையும் வைத்து ட்வீட் செய்துள்ளார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அரசியல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக உள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்க உள்ளார்.

மேலும் கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் சிலர் படம் தொடங்குவதற்கு முன்னரே ரூ 83 கோடி லாபம் கொடுத்து விட்டதாக தகவல்களை பரப்பி வந்தனர்.

இதனை பார்த்த சுரேஷ் காமாட்சி இதே போன்று தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என கண்டித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.