மாமன்னன் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாமன்னன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் 5 நாள் முடிவில் உலகம் முழுவதும் சேர்த்து 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் லாபத்தை குவிக்க தொடங்கி இருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.