MaaManithan
MaaManithan

MaaManithan : சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில்,

வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

ராஜா ராணி வில்லிக்கு திருமணம் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் கூடிய விரைவில் சிந்துபாத் படம் திரைக்கு வரவுள்ளது. இதுபோக பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடைய குருநாதர் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் மாமனிதன் படமும் ஒன்று.

MaaManithan

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டாராம்.

மேலும் பின் தயாரிப்பு பணிகளும் விரைவில் நிறைவுற்று ஜூன் ஜூலையில் படம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.