Shabnam

Shapnam Marriage : ராஜா ராணி சீரியல் வில்லி ஷப்னமிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகம் பேசப்படுவது ராஜா ராணி சீரியல் தான்.

விரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

இந்த சீரியலில் ஆல்யா மான்ஸா, கார்த்திக்கு பிறகு அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் வில்லியாக நடித்து வரும் ஷப்னம் தான்.

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யன் என்ற தொழிலதிபரை தான் ஷப்னம் திருமணம் செய்ய உள்ளார்.

ஆர்யன் ஒரு ஐ.டி கம்பெனியை நடத்தி வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ல் செப்டம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

நானும் ரவுடி தான் கோபி வெர்ஷன் – மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

இருவருமே தற்போது பிஸியாக இருந்து வருவதால் வரும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தேதி உறுதியானதும் நானே சொல்கிறேன் எனவும் ஷப்னம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.