பிரபல பாடலாசிரியராக திகழும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் கபிலன். விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலின் மூலம் பாடலாசிரியர் கபிலன் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து கமலின் ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு வேடத்திலும் நடித்திருந்தார். மேலும் பிரபல இயக்குனர் மிஷ்கினின் நண்பரான இவர் தற்போது வெளிவர உள்ள ‘பிசாசு 2’ படத்திற்கான பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இப்படி சினிமாத்துறையில் பிரபலமாக இருக்கும் கவிஞர் கபிலனுக்கு 28வயதில் தூரிகை என்ற மகள் இருந்தார். தூரிகையும் சினிமா துறையில் காஸ்டியூம் டிசைனராக ஜீ.வி.பிரகாஷ், சேரன் உள்பட திரையுலகினர் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராகவும், சில கான்சப்ட் ஷ¨ட்களிலும் பணியாற்றியிருக்கிறார். மேலும் பீயிங் வுமன் என்ற பிரபல இணைய இதழையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் தூரிகை நேற்று மாலை 4:30 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக தூரிகையின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியான தகவல் தூரிகையின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.