Lovers Day Special Album

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் உறவினர் ஏ.எச் காஷிஃப்பின் போகாதே இசைப்பாடல் வெளியாக உள்ளது. ஜாவித் அலி, சித் ஶ்ரீராம், விஷால் தத்லானி, ஜோனிதா காந்தி என முன்னணி இசை கலைஞர்களுடன் பயணித்து வரும் காஷிஃப், கடந்த 4 ஆண்டுகளாக தனிப்பாடல்களை காதலர் தினத்தன்று வெளியிட்டு வருகிறார். போ போ என் மற்றும் காதல் உள்ளிட்ட பாடல்களை வெளியிட்டுள்ளார். அவை 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

ஜோதிகா நடித்த காற்றின் மொழி தமிழ் படத்துக்கும், மம்முட்டி, பிரித்விராஜ் நடித்த 18-ம் படி மலையாளப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த காதலர் தினத்தன்று வெளியாகும் பாடலை, இயக்குனர் அட்லியிடம் முதன்மை இயக்குராக இருந்த அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். இஸ்பேட் ராஜா இதய ராணி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கவின் ராஜ் இப்பாடலை படம்பிடித்துள்ளார். கோமாளி பட புகழ் பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்பாடலில், அனந்த், வாஃபா கத்தீஜா ஆகியோர் நடித்துள்ளனர்

பாடல் வரிகள் – மோகன் ராஜன்

பாடியவர்கள் – ஏ.எச் காஷிஃப், ஜோனிதா காந்தி

ஊடகத் தொடர்பு

ரெட் கன்சல்டிங்

சுனிதா 9841234535

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.