Lokesh Rahul
Lokesh Rahul

Lokesh Rahul – இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல். இவர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பெண்கள் குறித்து அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் பிசிசிஐ அவர்களை சஸ்பெண்டு செய்து மீண்டும் விளையாட அனுமதித்தது.

சர்ச்சையால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட லோகேஷ் ராகுல், இந்தியா ‘ஏ’ அணியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதுடன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நேற்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் 47 ரன்கள் சேர்த்தார்.

டெஸ்ட் போட்டியில் சொதப்பி, சர்ச்சையில் சிக்கி பின்னர் அணிக்கு திரும்பி மீண்டும் பார்முக்கு வந்துள்ள லோகேஷ் ராகுலுக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று தொடக்க பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடும்போது ராகுல் டிராவிட் அதிக அளவில் உதவி புரிந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘ராகுல் டிராவிட் நீண்ட நேரங்கள் செலவழித்தேன். அப்போது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டேன்.

அவருடன் செலவழித்த நேரம் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட உதவியது. மீண்டும் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து, ப்ளூ ஜெர்சி அணிந்தது சிறப்பாக இருக்கிறது’’ என்றார்.