மாமன்னன் திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது வடிவேல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பு கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானதும் பகத் பாஹில் நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனக்கு தெரியும் நான் லேட்டு தான். ஆனால் மாமன்னன் படம் மிகவும் சூப்பராக உள்ளது எல்லோரும் திறமையான உழைப்பை கொடுத்துள்ளனர்.

இன்னும் படத்திலிருந்து நான் வெளிவரவில்லை என்று மாரி செல்வராஜ் உட்பட பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.