
இரும்பு கை மாயாவி அஜித் படம் மற்றும் தலைவர் 121 படம் குறித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அஜித் படம், இரும்புக்கை மாயாவி மற்றும் தலைவர் 171 படம் குறித்து பேசி உள்ளார். அஜித்துடன் இணைவீர்களா என கேட்க நிச்சயம் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு இரும்பு கை மாயாவி குறித்து கேட்க அதுதான் என்னுடைய கனவு ப்ராஜெக்ட். பத்து வருடமாக இந்த படத்தின் கதையை எழுதினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர் 171 படம் குறித்து கேட்க தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
