லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருக்கும் லியோ அப்டேட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக உயர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்று தற்போது முன்னணி இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

இவர் தற்போது தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல நிறுவனத்தின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படம் குறித்து பகிர்ந்திருக்கும் அப்டேட்ஸ் வைரலாகி வருகிறது. அதில் அவர், லியோ கண்டிப்பாக ஒரு சிறப்பான ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும் 60 படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாகவும் இன்னும் 60 நான் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.