கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படம் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.

Lokesh Kanagaraj in Vikram Movie Update : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவதாக தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரூ.1,597.59 கோடியில் திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் பல நடிகர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். பெரும்பாலான காட்சி இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படமாக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.