சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கால நேரம் அறிந்து பயணித்தால் எதிர்பார்த்த காரியம் கைகூடும் தானே. அதுபோல ரூ 1000 கோடியை வசூலிக்கும் சாதனையில், கூலி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ பட வெற்றியை தொடர்ந்து, விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, என நட்சத்திர பட்டாளமே நடிக்க,
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘கூலி’ படத்தின் கதைக்கரு ‘தங்கக் கடத்தலை பற்றிய பரபரப்பு நிகழ்வுகள் பற்றியது. அதனை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில், ரஜினிகாந்த் அதிகளவில் சண்டைக் காட்சியில் நடித்துள்ளதாகவும், இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்சுக்குள் வராது என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க தனி கதையம்சம் கொண்ட படமாகவே கூலி உருவாகி வருகிறது.
கூலி படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் தடைபட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூலி படத்தின் ரிலீஸ் அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூறியிருக்கிறார். அதன்படி, இப்படத்தை வருகிற 2025-ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையை டார்கெட் செய்து ரிலீசாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளிவிட வாய்ப்புகள் இருக்கிறது. படத்தை முடித்த கையோடு தன்னுடைய எல்சியூ படங்களை கையில் எடுக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அதன்படி முதலாவதாக கைதி2 படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடிக்க உள்ளார் லோகி. இப்படத்தை முடித்ததும் சூர்யாவை வைத்து ரோலெக்ஸ் என்கிற படத்தை எடுக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
எது எப்படியோ, கூலி படம் 1000 கோடிக்கு வெச்ச குறி விழனும்.!