Lokesh Kanagaraj About Rajini Movie :
Lokesh Kanagaraj About Rajini Movie :

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் உருவாக இந்த படம் குறித்து பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj About Rajini Movie : தமிழ் சினிமாவில மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். சிறிய பட்ஜெட்டில் வெளியான இப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் மோதினாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இரட்டிப்பு லாபத்தை கொடுத்தது.

ரஜினியுடன் அரை மணி நேரம் போனில் பேசினாரா அஜித்? உண்மை இது தான்.!!

இதனையடுத்து தற்போது தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் இவர் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்டதற்கு தற்போதைக்கு இந்த படம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இப்படம் பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.

ஒப்பந்தங்கள் கையொப்பமானதும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை முடித்த பிறகே அவர் அடுத்த படம் பற்றி யோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.