விஜயை வைத்து படம் எடுத்துட்டீங்க அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

Lokesh Kanagaraj About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார்.

விஜயை வைத்து படம் எடுத்துட்டீங்க அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா?? லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிரடி பதில்

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து அதைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை வைத்து படம் எடுப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது.

விஜயை வைத்து படம் எடுத்துட்டீங்க அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா?? லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிரடி பதில்

அதற்கு லோகேஷ் கனகராஜ் நிச்சயம் அதற்கான நேரமும் கதையும் அமைந்தால் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் திரையில் இந்த கூட்டணி அமைய வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.