
ஆஸ்திரேலியாவில் லியோ டிக்கெட் புக்கிங் சாதனை படைத்துள்ளது.
Leo Ticket Booking Record in UK : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீஸ்க்கு இன்னும் ஆறு வாரங்கள் இருக்கும் நிலையில் ஆஸ்ரேலியாவில் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை அங்கு வெளியிடும் நிலையில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சாதனையை படைத்த முதல் இந்திய திரைப்படமாக லியோ இடம் பிடித்திருப்பதாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் மற்ற நாடுகளிலும் புக்கிங் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.