டிராமா போட்டு கோபியை வைத்து கேம் ஆடுகிறார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மயக்கம் போட்டது போல் நடிக்க அதைப் பார்த்து கோபி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிட வைத்து ரெஸ்டாரன்ட் போயிட்டு வருவதாக சொன்ன நீ என்கூடவே இருக்கு எனக்கு இங்க இருக்கு உங்க ஏதாவது பண்ணிடுவாங்கனு பயமா இருக்கு என்று சொல்கிறார். கோபி அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மா நான் சீக்கிரமா வந்துடுறேன் என்று சொல்கிறார்.

கோபி கிளம்பியதும் ஈஸ்வரி ‌‌‌‌ கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இது டிராமா என காட்ட அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்ததாக ஜெனி தாத்தாவிற்கு சாப்பாடு போட்டு ரூமுக்கு எடுத்து வர அமிர்தா ஏற்கனவே சாப்பாடு கொடுத்து கொண்டிருப்பதை பார்த்து அப்படியே நிற்கிறார். இதைத்தொடர்ந்து தாத்தா ஜெனியை கூப்பிட ஜெனி சும்மா வந்ததாக சொல்லி சமாளிக்கிறார்.

அதன் பிறகு அமிர்தாவிடம் நான் தாத்தாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் ஆனால் நீங்க எனக்கு முன்னாடி கொடுத்துட்டு இருந்தீங்க என்று சொல்ல நீங்க கேட்டு இருக்கலாம் இல்ல என்று அமிர்தா செல்ல தாத்தாவுக்கு சாப்பாடு கொடுக்க உங்க கிட்ட கேட்டு தான் கொடுக்கணுமா என்று கேட்டேன் நான் அப்படி சொல்லல ஜெனி.. தாத்தா கிட்ட சாப்டீங்களா நீ கேட்டிருக்கலாம் என்று சொல்கிறார். ஏன் ஜெனி ஒரு மாதிரி பேசுறீங்க என்று அமிர்தா கேட்க ஜெனி அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று ரூமுக்கு சென்று விடுகிறார்.

அடுத்ததாக கமலா ராதிகாவுக்காக ஆப்பிள் கட் பண்ணி வைத்து விட்டு கிச்சனுக்குள் செல்ல ஈஸ்வரி அதை எடுத்து வந்து சாப்பிட அதை பார்த்து கமலா கோபப்படுகிறார். அது ராதிகாவுக்காக கட் பண்ணுனது என்று சொல்ல இதுல ஒன்னும் ராதிகா பேர் இல்லையே என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு அங்கு வந்த ராதிகா உங்களுக்கு சுகர் இருக்கு அப்புறம் சுகர் அதிகமாகிட்டு திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்த கோபி எங்களை எதையாவது சொல்றதுக்கா என்று தட்டை பிடிங்கிக் கொள்ள ஈஸ்வரி கோபிக்கு போன் போட்டு சாப்பிடுற தட்டை கூட பிடிங்கிட்டாங்க அதுவும் ராதிகா தான் இப்படி பண்ணா என்று வேற மாதிரி கொளுத்தி போடுகிறார். உடனே கோபி ராதிகாவிற்கு ஃபோன் போட்டு சத்தம் போட ராதிகா சொல்ல வருவது கூட கேட்காமல் போனை கட் பண்ணி விடுகிறார். அதன் பிறகு ராதிகா உங்களுக்கு இதான வேண்டும் இந்தாங்க சாப்பிடுங்க என்று தட்டை கொடுக்க எனக்கு சுகர் இருக்கு, எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று அந்தர் பல்ட்டி அடிக்கிறார்.

பிறகு ஜெனி தாத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்கியாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். எழில் ப்ரொடியூசர் கதையைக் கேட்டு ஓகே சொல்லிட்டதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு இந்த விஷயத்தை பாட்டியிடம் சொல்ல ஈஸ்வரிக்கு போன் போட ஈஸ்வரி எழில் ஃபோனை எடுக்காமல் இருக்கிறார்.

அதன் பிறகு தாத்தா போனில் இருந்து போன் போட ஈஸ்வரி ஃபோனை எடுக்க என்ன பாட்டி ஏன் போன்ல இருந்து போன் எடுக்க மாட்றீங்க தாத்தா போன்ல இருந்து மட்டும் போன் வந்ததும் எடுக்கறீங்க என்று கேள்வி கேட்க என்ன விஷயம் சொல்லு என்று ஈஸ்வரி கேட்கிறார். ப்ரடியூசர் கிட்ட கதை சொல்லி ஓகே ஆயிடுச்சி இன்னும் ரெண்டு மாசத்துல ஷூட்டிங் போகணும் என்று சொல்ல இதைக் கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.

ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் போய் சரி சரி சந்தோஷம் என்று சாதாரணமாக சொல்ல என்ன பாட்டி அவ்வளவுதானா உங்க சந்தோசம் என்று எழில் கேட்கிறார். அப்படியே நீ ஒரு குழந்தை பெத்துக்கிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று ஈஸ்வரி சொல்ல நல்லா சாப்பிடுங்க உடம்ப பாத்துக்கோங்க உங்களுக்கு போர் அடிச்சா கிளம்பி வந்துடுங்க என்று போனை வைக்கிறார்.

இதை பார்த்த கமலா யாரையோ குழந்தை பெத்துக்க சொல்றது பெத்த புள்ள குழந்தை பெற்றுக்கொள்வது வேண்டாம்னு சொல்றது என்று சொல்ல நான் ஒன்னும் யாரையும் சொல்லல என் பேரனை தான் சொன்னேன் என்று ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.