கடை திறப்பு விழாவில் மனோஜ் எடுத்த முடிவால் விஜயா அதிர்ச்சி அடைய அதை கவனித்த முத்து மனோஜ் மனதை மாற்றியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனா ரூமுக்குள் தூங்கச் செல்ல ஹாலுக்கு வந்த மனோஜ் தூக்கமில்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். ரோகிணி ஒரு வாரம் தான் வரும் விடு அமைதியா இரு என்று சொல்கிறார்.

அதன் பிறகு திடீரென மனோஜ் எழுந்து சென்றது தனது ரூம் கதவை தட்டி என்னோட சார்ஜர் வேண்டும் என எடுத்து வருகிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் திரும்பவும் கதவைப் பற்றி என்னுடைய தலகாணி வேணும் என்று எடுத்துக் கொள்கிறார் திரும்பவும். திரும்பவும் கதவைத் தட்டி பெட்ஷீட் வேணும் என எடுத்து வருகிறார். இப்படி திரும்பத் திரும்ப கதவைத் தட்ட முத்து கடுப்பாகி மனோ சம்மந்தப்பட்ட பொருட்கள் எல்லாத்தையும் மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறார்.

பிறகு மீனா தரையில் பாய் விரிக்க அதான் பெட் இருக்கே.. அப்புறம் எதுக்கு பாய் போடுற என்று கேட்க அது ஒன்னும் நம்ம பெட் கிடையாது இது பஸ்ல கிடைக்கிற ஜன்னல் ஓர சீட்டு மாதிரி தான். அடுத்த வாரம் நமக்கு கிடைக்குமிடம் கூட தெரியாது என்று சொல்கிறார். பிறகு முத்து மீனா பக்கத்தில் ஆகி விரித்து போட்டு படுக்க நீங்க மேல படுக்க வேண்டியது தானே என்று கேட்கிறார்.

எப்பவும் உன் பக்கத்துல தானே படுத்து தூங்குவேன்.. உன் மேல ஒரு பூவாசம் வந்துகிட்டே இருக்கும் அது நல்லா இருக்கும் என்று சொல்ல அப்படின்னா ஃப்ரிட்ஜில் இருந்து பூவை கொண்டு வந்து தரேன் சுத்திக்கிட்டு படுத்து தூங்குங்க என்று சொல்ல அதான் நீ இருக்கியே உன்னையே கட்டிக்கிறேன் என்று முத்து மீனாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

ஹாலில் மனோஜ் தூங்காமல் உட்கார்ந்து இருக்க ரோகிணி அடுத்த வாரம் நீ இதுக்கு ஒரு முடிவு வரும் சுருதி பணக்கார வீட்டு பொண்ணு.. அவளால கண்டிப்பா வெளியே படுத்து தூங்க முடியாது நிச்சயமாக ஏதாவது பிரச்சனை பண்ணுவா இதுக்கு ஒரு வழி பிறக்கும் என்று சொல்கிறார். பிறகு விஜயா நீ ஏன்டா என்கிட்ட என்கிட்ட வாங்கி கொடுத்துட்டு இருக்க போய் படுத்து தூங்கு என்று ரூமுக்கு சென்று விடுகிறார்.

நைட் எல்லாம் தூங்காமல் இருக்கும் மனோஜ் முடிந்ததும் வெளியே எழுந்து வந்த விஜயாவிடம் எனக்கு தூக்கமே வரல எப்படியாவது ரூமை வாங்கி கொடுங்க என்று பேசுகிறார். பிரஷ்ஷா இருந்தால் தானே நல்லபடியா பிசினஸ் பார்க்க முடியும் நிறைய கிரியேட்டிவா யோசிக்க முடியும் என ஒரு வாரம் பொறுத்துக்க என்று சொல்கிறார் விஜயா.

அடுத்ததாக எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மனோஜ் உட்கார்ந்த படியே தூங்க முத்து இவன் என்னப்பா புதுசா சாமி எல்லாம் கும்பிட்டு இருக்கா என்று கேட்கிறார். ரோகிணி மனோஜை எழுப்ப மனோஜ் தூக்கத்தில் என்ன சார் வேணும் என புலம்புகிறார். பிறகு கடை திறப்பு விழாவை எப்ப வச்சிருக்க என்ன ஏற்பாடு பண்ணி இருக்க என்று அண்ணாமலை கேட்க கடையைத் திறக்கறதுக்கு தான் ரெண்டு மூணு ஆர்டிஸ்ட் கிட்ட பேசிட்டு இருக்கோம் என்று சொன்னது விஜயாவின் முகம் சுருங்கி விடுகிறது.

நோட் பண்ணு முத்து எதுக்கு நடிகை எல்லாம் வச்சு கடையை திறக்கவும் என்று கேட்க மீனா அவங்களுக்கு காசு கொடுக்கணுமே என்று கேட்க ரவி ஆமா அண்ணி அவங்களுக்கு பே பண்ணனும் என்று சொல்கிறார். நல்லா வாழ்ந்து உங்களை வைத்து கடையை திறக்கலாம்ல அது எல்லாருக்கும் நல்லது என்று மீனா சொல்ல ரோகினி இதெல்லாம் பிசினஸ் ஸ்டேட்டர்ஜி இத பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாது என சொல்கிறார். அடுத்து இந்த மாதிரி நடிகைகளை வச்சு கடைகளை திறந்தா தான் விளம்பரம் கிடைக்கும் என்று சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை தரமான பொருளை கொடுத்தாலே நம்பி வருவாங்க என்று சொல்ல ரவி நீங்க சொல்றது தான் பா சரி என்று சொல்கிறார். பெருசா பிரமோஷன் எதுவும் இருக்காது ஆனா அந்த கடைகளை நம்பி வருவாங்க. அதுக்கு காரணம் தரமான பொருட்களை கொடுக்கிறது தான் என்று சொல்கிறார்.

மனோஜ் ஏன் நம்ம வீட்ல பார்த்து இருக்காங்க அம்மா இருக்காங்க அப்பா இருக்காங்க உங்களையெல்லாம் வச்சு கடையை திறக்கணும்னு உனக்கு தோணலையா என்று கேட்க விஜயா தனது பெயரை சொன்னதும் முத்துவை ஆச்சரியமாக பார்க்கிறார். அப்பயும் மனோஜ் நடிகைகளை வைத்து கடையை திறப்பதில் உறுதியாக இருக்க பிறகு அண்ணாமலை நீ நல்லா இருக்கணும்னு எப்பயும் யோசிக்கிறது விஜயா மட்டும் தான் அவள வச்சு கடையை திற.. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று சொன்னால் ரோகிணி அப்படியே அந்த பல்டி அடித்து ஆன்ட்டியே கடையை திறக்கட்டும் என்று சொன்னதும் முத்து இது அந்த பல்டியா இருக்கு என்று கலாய்க்கிறார்.

ஆரம்பத்திலேயே நான் ஆண்டியை வைத்து தான் திறக்கலாம்னு சொன்னேன் என்று ரோகினி சமாளிக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் மனோஜூம் ஓகே சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். இப்போ உன் அம்மாவோட முகத்தை பாரு 1000 வாட் லைட் எரியுற மாதிரி இருக்கு என்று அண்ணாமலை விஜயாவை பற்றி சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.