லியோ படக்குழுவுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் விடுபட்ட காட்சிகளை படமாக்க லியோ படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் காஷ்மீரில் இருந்து லியோ படக்குழுவினர் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் இருக்கும் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.