லிரிக்ஸ் வீடியோவில் எச்சரிக்கை வாசகத்தை லியோ படக்குழு இணைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்தவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடிதான்” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் பாடலில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இப்பாடல் குறித்து விஜய் மீதும் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பாடலின் லிரிக்ஸ் வீடியோவில் “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்” என்ற எச்சரிக்கை வாசகத்தை லியோ படக்குழு தற்போது இணைத்து சர்ச்சைகளுக்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.