லியோ படத்தின் ஹரோல்ட் தாஸ் கிலிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து.

திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 15ஆம் தேதி நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

ரசிகர்களின் பயங்கரமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.