லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடர்பான அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் லியோ படம் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, லியோ படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. இதனை பட வெளியீட்டு நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் தெரிவித்து இருக்கிறது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.