விஜயின் லியோ திரைப்படத்தில் நடிகை கிரண் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தில் நடித்திருப்பதாக பிரபல நடிகை அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதன்படி, தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை கிரண் ராதோட் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, “லியோ படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்”. ஏற்கனவே இப்படத்தில் ஏராளமான பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில் இவரது இந்த பேட்டியின் தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.