உலகளவில் 400 கோடிக்கு பிசினஸாகி உள்ள லியோ படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படம் உலக அளவில் இதுவரை பிசினஸ் மூலமாக மட்டுமே மொத்தம் 450 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பிசினஸ் மூலம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழக ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களே வைத்திருந்த நிலையில் தற்போது ஏரியா வாரியாக பிரித்துக் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் லியோ ரூ 100 கோடி வரை விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.