தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு ‘அந்தோணி தாஸ் வருகிறார்’ என்று படகுழு தெரிவித்துள்ளது. இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் இன்று நடிகர் சஞ்சய்தின் பிறந்தநாள் என்பதால் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிடப் போவதாக கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.