மொத்தம் 400 கோடிக்கு லியோ படம் பிசினஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து அண்ணன் ரெடி நான் வரவா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 400 கோடி வரை பிசினஸ் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தெலுங்கு வேல் மட்டும் இந்த படத்தின் திரையரங்க உரிமை ரூபாய் 25 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் விஜய் திரைப்படம் அதிக தொகைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.