
அண்டை மாநிலத்தில் முதல் நாளில் மட்டும் மூவாயிரம் காட்சிகளை திரையிட லியோ பட குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், அர்ஜுன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலை எது அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் முதல் நாளில் 650 திரையரங்குகளில் கிட்டத்தட்ட 3000 காட்சிகளை திரையிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் கேரளாவில் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆகையால் படக்குழுவின் இந்த முயற்சி மாபெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
