
லியோ அர்ஜுனின் கிளிம்ஸ் வீடியோ சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்களில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன். ஹரால்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவரின் கிளிம்ஸ் வீடியோ அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக நேற்று மாலை ஐந்து மணிக்கு வெளியானது.
இந்த நிலையில் இந்த வீடியோ வெளியான 15 மணி நேரத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 90 ஹீரோவாக பார்த்த அத்தனை மிரட்டலான வில்லனாக பார்ப்பது மிகவும் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.