Lebanon Bomb Blast
Lebanon Bomb Blast

Lebanon Bomb Blast : லெபனான் தலைநகரம் பெய்ரூட்டில் நேரிட்ட அதிபயங்கரமான வெடிவிபத்திற்கு பலர் பலியாகி உள்ளனர். இந்த கோர சம்பவத்தை நேரடியாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் இதைப் பார்க்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அதன்பின் அந்த வெடி விபத்திற்கு காரணம், 2750 டன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்ததால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெய்ரூட் வெடிவிபத்தில் காயம் காயமடைந்த லெபனானின் நெதர்லாந்து தூதரின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெய்ரூட்டி துறைமுக கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் நெதர்லாந்து தூதர் ஜான் வால்ட்மென்ஸ் மனைவி ஹெட்விக் வால்ட்மென்ஸ் காயமடைந்தார்.

வெடி விபத்தின் போது தனது இல்லத்தில் கணவன் அருகே நின்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாய் வெடித்து சிதறிய துகள்கள் தாக்கி அவர் படுகாயமுற்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.