Laxmi Menon Re Entry

தமிழ் சினிமாவில் லட்சுமி மேனன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Laxmi Menon Re-entry in Tamil Cinema : தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கும்கி. இந்த படத்தில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் லட்சுமி மேனன்.

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தார்.

விஜய், சூர்யாவை விளாசும் மீரா மிதுன்.. இதுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்றாங்க தெரியுமா? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பதில்!

இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதைப்போல் கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த படமும் பாதியிலேயே நின்று போனது.

மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு தற்போது விலகியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

இவர் அடுத்ததாக நடிகர் ஆதக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை இயக்குநர் வசந்தபாலனின் உதவியாளரான ராஜசேகர பாண்டியன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.