விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள லத்தி படம் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இயக்குனர் ஏ வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் நந்தா அவர்களின் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் லத்தி.

படத்தின் கதைக்களம் :

நடிகர் விஷால் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். குறிப்பாக லத்தி ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார்.

படத்தின் கதைப்படி கான்ஸ்டபிள் முருகானந்தத்தை திடீரென சஸ்பெண்ட் செய்ய அவர் மீண்டும் வேலையில் சேர்வதற்காக உயர் அதிகாரி பிரபுவை தேடி செல்கிறார். அவரும் விஷாலுக்கு மீண்டும் வேலை வாங்கி கொடுப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய கஸ்டடியில் உள்ள ஒருவனை டார்ச்சர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.

அந்த நபர் யார் அவரால் விஷாலுக்கும் அவருடைய மகனுக்கும் ஏற்படும் சிக்கல்கள் என்ன? கடைசியில் நடந்தது என்ன? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்‌.

படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் விஷால் கான்ஸ்டபிளாக தன்னுடைய பாடி லாங்குவேஜ் மொத்தத்தையும் மாற்றி எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்தை தன் தோள் மீது சுமக்கிறார்.

கொஞ்ச நேரம் மட்டுமே வந்து போகும் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ப எதார்த்தமான நடிப்பையும் கொடுத்துள்ளார்.

நாயகியாக வரும் சுனைனா உட்பட மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் சேர்த்தாலும் பாடல்கள் பலவீனமாக உள்ளன.

இயக்குனர் கே வினோத் குமார் கதையை கையில் எடுத்து அதை அழகாக கொண்டு சென்றுள்ளார். ஆக்சன் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி மெனக்கெட்டுள்ளார்.

REVIEW OVERVIEW
லத்தி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
lathi-movie-reviewமொத்தத்தில் லத்தி விஷால் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்.