சிறுத்தை சிவா இயக்கும் வரலாற்று படத்தில் சூர்யா எத்தனை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் சூரியா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த திரைப்படம் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் உருவாகிறது. கடந்த காலம் நிகழ்காலம் என இரண்டு நிமிடம் பெரும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் திரைப்படம் உருவாகி வருகிறது.

சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை பத்து மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியிட குழு முடிவு செய்துள்ளது.

இப்படியான நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் மொத்தம் 13 கதாபாத்திரங்களில் நடிக்கிறார் எனவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.