அரபி குத்து பாடலைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update on Beast Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

நூறாவது நாள் படப்பிடிப்பில் படக்குழு போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரல் ஆனது. இதனையடுத்து காதலர் தினத்தில் வெளியான அரபிக் குத்துப்பாடல் இன்னமும் சமூக வலைதளங்களில் அதன் அதிர்வை நிறுத்திய பாடு இல்லை. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

ஆனால் திரைக்கதை வேகத்தின் காரணமாக இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை எனவும் இதனால் படத்தின் இறுதியில் பாடலை சேர்க்கை படக்குழு முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. டீசர் உருவாக்கமும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் டீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் இன்னும் அரபிக் குத்து ஆட்டமே முடியல அதற்குள்ள டீசரா செம மாஸ் தான் என கொண்டாடி வருகின்றனர். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.