Latest Update of Chiyaan 60

இறுதி நேரத்தில் சியான் 60 திரைப்படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டுள்ளார், மேலும் துருவ் மற்றும் விக்ரமுக்கு யார் ஜோடி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest Update of Chiyaan 60 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான இந்த திரைப்படத்தில் துருவ்வின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடிக்க உள்ள சியான் 60 படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இறுதி நேரத்தில் இந்த படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டது ஏன்? என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.