உதயநிதி ஸ்டாலினின் காட்சிகளை படம் பிடிக்க தொடங்கி இருக்கும் படக்குழு எங்கு வைத்து எடுக்க உள்ளார்கள் என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் தான் மாறி செல்வராஜ். இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் ‘மாமன்னன்’. இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாகவும் அவருக்கு மகனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அன்னையில் சேலத்தில் நடந்து முடிந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது உதயநிதியின் காட்சிகளை படமாக்குவதற்காக சென்னையில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.