பட்டையைக் கிளப்பும் வகையில் பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest Update From Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அதன் இயக்குனர் செல்வராகவன் உட்பட எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை மாலை 6 மணிக்கு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஆக இருக்கும் எனவும் தகவல்கள் பரவியது.

ஆனால் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.