தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது தளபதி 66.

Latest Update About Thalapathy 66 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படம் 2022 சம்மர் விடுமுறையில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை தில் ராஜா தயாரிக்கிறார்.

தற்போது இந்த பணம் பற்றிய கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் திரைப்படம் தளபதி 66 தான் என தெரியவந்துள்ளது.

ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

Simbu-வின் Maanaadu படத்துக்கு கூட நான் போகல – T.Rajendar ஆவேச பேச்சு | HD