லேட்டஸ்ட் லுக்கில் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போதைய விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க அர்ஜுன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் வெளியானதை தொடர்ந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் தொடர்ந்து விதவிதமான லுக்குகளில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது அஜித் மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.