
சசிகலாவின் மிரட்டலால் தான் விஜய் அந்த படத்தில் நடித்தார் என அந்தணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக சினேகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 20 வருடங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து வசீகரா படத்தில் நடித்திருந்தனர்.
இப்படியான நிலையில் வசீகரா படத்தில் விஜய் மிரட்டி தான் நடிக்க வைக்கப்பட்டதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். வசீகரா படத்தில் விஜய் நடிக்க வைக்க போயஸ் கார்டனில் இருந்து கால்ஷீட் கேட்டார்கள்.
முதலில் முடியாது என விஜய் மறுக்க பிறகு சசிகலா கால்ஷீட் கேட்கிறார், நீங்கள் நடித்து தான் ஆக வேண்டும் என மிரட்டி தான் விஜயை நடிக்க வைத்ததாக அப்போதே படம் வெளியான போது தகவல்கள் உலா வந்தன என்று அந்தணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
