ரசிகர் ஒருவர் கருப்பு நிறத்திற்கு எப்பொழுது அடிமையானீர்கள் என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு சிம்பிள் அண்ட் சூப்பராக புகைப்படத்துடன் சுருதிஹாசன் பதில் அளித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்தார். அதன் பிறகு சூர்யாவின் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய திரை உலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

கருப்பு நிறத்திற்கு எப்பொழுது அடிமையானீர்கள்? - ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த சுருதிஹாசன்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சுருதிஹாசன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதோடு நேரம் கிடைக்கும்போது ரசிகர்களிடமும் உரையாடி வருவார். அதேபோல் தற்போது Ask me something fun என்று சுருதிஹாசன் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். அதனால் ரசிகர் ஒருவர், நீங்கள் எப்பொழுது முதன்முதலில் கருப்பு நிறத்திற்கு அடிமையானீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

கருப்பு நிறத்திற்கு எப்பொழுது அடிமையானீர்கள்? - ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த சுருதிஹாசன்.

அதற்கு ஸ்ருதிஹாசன் அவரது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, “time for that face tat??” என்று பதிலளித்துள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையணிந்திருந்த ஸ்ருதிஹாசன், கன்னத்தில் டாட்டூ போட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன் இருக்கக்கூடிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

கருப்பு நிறத்திற்கு எப்பொழுது அடிமையானீர்கள்? - ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த சுருதிஹாசன்.