தனுஷை மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தியிடம் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் நட்சத்திர தம்பதியாக அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது இவ்வாண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இணையதளத்தில் அறிவித்திருந்தனர்.

கணவரை அடியோடு மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! பழசை மறக்காத தனுஷ்? - வைரலாகும் ரசிகர்களின் பதிவு.

அதற்கு ரசிகர்கள் பலர் தம்பதிகளாக சேர்ந்து வாழ சொல்லி தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர் ஆனாலும் அதனை மறுத்து தற்போது பிரிந்து வாழும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி தற்போது பிஸியாக இருக்கின்றனர். சமீபத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘பயணி’ என்னும் ஆல்பம் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியானது.

கணவரை அடியோடு மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! பழசை மறக்காத தனுஷ்? - வைரலாகும் ரசிகர்களின் பதிவு.

அதற்கு பழசை மறக்காத நடிகர் தனுஷ் அதனை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்து, “எனது தோழி ஐஸ்வர்யா அவர்களின் இந்த ஆல்பம் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார். அதற்குப்பின் நேற்றைய தினம் தனுஷ் அவரது 39 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

கணவரை அடியோடு மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! பழசை மறக்காத தனுஷ்? - வைரலாகும் ரசிகர்களின் பதிவு.

ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் வாழ்த்து கூறவே இல்லை. இதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் உங்களது ஆல்பம் சாங்கிருக்கு அவர் வாழ்த்து கூறினார். ஆனால் நீங்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூட கூறவில்லை ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்ற கேள்வியோட தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.