
பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனத்திற்கு வீட்டுக்கு தெரியாமல் ஆபரேஷன் நடைபெற்ற நிலையில் அந்த விஷயம் தற்போது ஒவ்வொருத்தருக்காக தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் மொத்த பேரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை கடைசி நாள் சூட்டிங் போட்டோவாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்த அடுத்த நாளிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியல் பாணியில் சீசன் 2 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
