நயன்தாரா,சுந்தர் சி பிரச்சனை.. மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து குஷ்பு கொடுத்த விளக்கம்.!
நயன்தாரா சுந்தர்.சி பிரச்சனை குறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார்.

kushboo talk about mookuthi amman 2 movie issue
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பிலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. பூஜையில் நயன்தாரா சுந்தர் சி, குஷ்பூ, ரெஜினா, மீனா, போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நயன்தாரா உதவி இயக்குனரை திட்டியதால் சுந்தர் சி ஹீரோயினை மாற்ற திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது இது குறித்து குஷ்பு பேசியுள்ளார்.
அதில் சுந்தர் சி யின் நலம் விரும்பிகள் அனைவருக்கும். மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலாவி வருகிறது உண்மையில் படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடந்து வருகிறது சுந்தர்சி எப்படிப்பட்ட இயக்குனர் என்று உங்களுக்கு தெரியும் நயன்தாராவும் ஒரு திறமையான நடிகை இணையத்தில் பரவி வரும் இந்த வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும் உங்களின் ஆசிர்வாதம் மற்றும் அன்பு மட்டுமே நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த நாள் இதுவரை பரவி வந்த வதந்திக்கு இந்த தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

kushboo talk about mookuthi amman 2 movie issue