Kushboo Re-entry in Zee Tamil Serial

சன் டிவியில் இருந்து வேறொரு சேனலுக்கு தாவி சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் குஷ்பு ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kushboo Re-entry in Zee Tamil Serial : தமிழ் சினிமாவில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அதன் பின்னர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த குஷ்பு அந்தக் கட்சியிலிருந்து விலகி பிஜேபியில் சேர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மிகவும் மோசம் : மன்மோகன் சிங் வருத்தம்

தேர்தல் தோல்விக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் குஷ்பு. புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து அதில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகை குஷ்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியலான கோகுலத்தின் சீதை சூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

என்ன மாதிரி யாரும் இருக்கமாட்டாங்க? – மேடையில் கடுப்பான வனிதா! | Vanitha Vijayakumar

இந்த சீரியலில் அவர் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? அல்லது கெஸ்ட் ரோலா என்பது தெளிவாக தெரியவில்லை. இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 300க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இல்ல இந்த சீரியலில் நளினி காந்திமதி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.