KPY Yogi Marriage Photos
KPY Yogi Marriage Photos

லாக் டவுனில் சைலன்டாக திருமணத்தை முடித்துள்ளார் KPY யோகி.

KPY Yogi Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் பலர் உண்டு.

அப்படியானவர்களில் ஒருவர் தான் KPY யோகி. தன்னுடைய காமெடியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வயது கூடிக்கொண்டே போனாலும் சிங்கள் ஆகவே இருந்து வந்த யோகி இந்த லாக் டவுனில் தன்னுடைய காதலியிடம் காதலை சொல்லி அவரை திருமணம் செய்துள்ளார்.

தன்னுடன் 11,12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்பவரை தான் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக வேண்டிய படம்.. ஆனால் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டானது – இது எந்த படம் தெரியுமா?

பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்படவில்லை. 96 பட பாணியில் பள்ளியில் ரியூனியன் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது சௌந்தர்யாவின் மீது யோகிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தன்னுடைய காதலை அவரிடம் கூற தயக்கப்பட்டுள்ளார். காரணம் அப்போது தான் அவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தருணம்.

இந்த நிலையில் தற்போது வேலையில்லாமல் லாக் டவுன் காரணமாக வீட்டிலிருந்து வரும் யோகி தன்னுடைய காதலியிடம் காதலை கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.