Thalapathy Vijay Missing Movie Secret
Thalapathy Vijay Missing Movie Secret

விஜய் நடிப்பில் உருவாக வேண்டியிருந்த படம் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கதை தெரிய வந்துள்ளது.

Thalapathy Vijay Missing Movie Secret : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் தளபதி விஜய் தான் வளர்ந்து வந்த நேரத்தில் பல்வேறு படங்களை தவிர விட்டுள்ளார்.

அவர் தவற விட்டு பிற நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மிகவும் ஹிட்டான திரைப்படங்கள் பல உண்டு.

அப்படியான படங்களில் ஒன்று தான் தூள். விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான இந்தப் படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார்.

திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா..! – அதிரவைக்கும் பின்னணி

ஆனால் இப்படத்தின் கதையை முதன் முதலில் தளபதி விஜய்க்காக தான் எழுதியதாக தரணி கூறியுள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது.

இதனையடுத்து தரணி தளபதி விஜயை வைத்து கில்லி என்ற படத்தை இயக்கி இருந்தார். கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.