சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் மோனிஷா பிளசி என்னும் KPY நட்சத்திரம் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு என்ட்ரி ஆகும் KPY நட்சத்திரம் - யார் தெரியுமா?

இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் படத்தின் நடிகை அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு மற்றும் நடிகை சரிதா ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு என்ட்ரி ஆகும் KPY நட்சத்திரம் - யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு(KPY) சீசன் 8” என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோனிஷா பிளசி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மோனிஷாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.